இந்திய ரயில்வே துறையில் வேலை பெறுவது எப்படி?.
இந்திய ரயில்வே துறையில் வேலை கிடைக்க வேண்டும் என்பது பலரின்
கனவு. தமிழகத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு மிகவும் சவாலான தேர்வாக இருந்து வருவதும்
இந்திய ரயில்வேத்துறையின் தேர்வு மட்டுமே. தேர்வின் அடிப்படையில் தான் அடுத்தகட்ட பிரிவுக்கு
செல்ல முடியும் என்பதால் கடின முயற்சியும், வேகமும் இருந்தால் நிச்சயம் ரயில்வே பணியை
கைப்பற்றிவிடலாம்.
ரயில்வே நிறுவனம் இரண்டு பிரிவுகளாக பணியிட விவரங்களை அறிவித்துள்ளது.
முதல் பிரிவில் 26502 காலியிடங்களுடன் அசிஸ்டெண்ட் லோகோ பைலட், டெக்னீசியன் பணிகளுக்கும்,
இரண்டாவது பிரிவில் 62907 காலியிடங்களுடன் டிராக்மேன், கேட்மேன், பாயிண்ட்ஸ்மேன், எலெக்ட்ரிக்கல் ஹெல்பர், மெக்கானிக்கல், சிக்னல் & டெலிகம்யூனிகேஷன் பணிகளுக்கும் தேர்வுகளை
நடத்த இருக்கிறது.
முதல் பிரிவுகளில் இருக்கும் அசிஸ்டெண்ட் லோகோ பைலட்
அல்லது டெக்னீசியன் பணிகளில் தேர்ச்சி பெறுவதற்கான வழிகளை தற்போது பார்ப்போம்.
அசிஸ்டெண்ட் லோகோ பைலட் பணிக்கு ஆர்மட்சூர்
& காயில் வைண்டர், எலெக்ட்ரீசியன், எலெக்ட்ரானிக் மெக்கானிக், ஃபிட்டர், ஹீட்
என்ஜீன், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், மெஷினிஸ்ட், மெக்கானிக் டீசல், மெக்கானிக்
மோட்டார், மில்ரைட் மெயின்டெனன்ஸ் மெக்கானிக், மெக்கானிக் ரேடியோ & டி.வி,
ஏ.சி மெக்கானிக், டிராக்டர் மெக்கானிக், டர்னர், வயர்மேன் பாடப்பிரிவுகளில்
ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ஐ.டி.ஐ படிப்பு அல்லது மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல்,
எலெக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிப்ளமோ
அல்லது பி.இ/ பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். (பி.இ/ பி.டெக் படித்தவர்கள்
அப்ரண்டீஸ் பயிற்சி பெற்றிருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்க இயலாது)
டெக்னீசியன் பணிக்கு Forger and Heat
Treater, பைண்டர்,
ஃபிட்டர், கார்பெண்டர், வெல்டர், பிளம்பர், பைப் ஃபிட்டர், எலெக்ட்ரீசியன்,
மெக்கானிக் ஆட்டோ எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ், வயர்மேன், எலெக்ட்ரானிக்
மெக்கானிக், மெக்கானிக் பவர் எலெக்ட்ரானிக்ஸ், வெல்டர், ஏ.சி மெக்கானிக்
பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ஐ.டி.ஐ படித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறையை எப்படி?.
முதல்கட்டமாக CBT எனப்படும் கம்ப்யூட்டர் பேஸ்ட் தேர்வு
இருக்கும். கம்ப்யூட்டர் பேஸ்ட்
தேர்வில் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் இருக்கும். கணிதம், ஜெனரல் அவேர்னஸ்,
ஜெனரல் இன்டலிஜன்ஸ், ரீசனிங் பிரிவுகளில் இருந்து 75 கேள்விகள் கேட்கப்படும்.
இத்தேர்வுக்கு 60 நிமிடம் வழங்கப்படும். எங்களது ஆசிரியரின் படிப்பு புதியதலைமுறையில் மேலும் விவரங்களுக்கு>>>>>